Tuesday, December 22, 2009

சென்ற சனிக்கிழமை வேலூர் சென்ற பொது அங்கே ஒய்வு பெற்ற(ஆண்) ஆசிரியர்களை சந்தித்தோம். மாலை நேரத்தில் சங்க கட்டிடத்தில் எல்லோரும் கூடி பேசிக்கொண்டிருந்தார்கள். என் மனதில் எதோ உறுத்தல் தோன்றியது. ஏன் இது போல் ஒய்வு பெற்ற பெண்கள் கலந்தது பேசுவதில்லை? பெண் எந்த வயதிலும் தனிமைப்பட்டுத்தான் போகின்றாள். உஷா சித்திக்கு இது போன்ற வாய்ப்புக்கள் கிடைத்திருந்தால் அவர்கள் படித்த , ரசித்த எவ்வளவோ விஷயங்கள் பலருக்கும் போய் சேர்ந்திருக்கும். பூனைக்கு யார் மணி கட்டுவது?

3 comments:

  1. hi booma akka,

    good try. iam waiting for the next drop. wish u a happy new year.

    ReplyDelete
  2. நீ சொல்வது சரி தான். பெண்ணுக்கு பணி ஓய்வு என்பது வீட்டைப்பொருத்த வரை என்றுமே இல்லையே! ஆயினும் பெண்கள் தங்கள் எண்ணங்களை எப்படியோ வெளிப்படு த்திக்கொண்டு விடுகிறார்கள்.
    அம்மாவுக்கு நண்பர்கள் அதிகம் தான். பெரும்பாலான நண்பர்கள் வீட்டு மனிதர்களாகவும் உறவினர்களாகவும் அமைந்தது அம்மாவின் அதிருஷ்டத்தினாலா , பழகும் திறமையினாலா என்று நிச்சயமாக சொல்ல முடியவில்லை. தன்னுடைய பதினாறாம் வயதில் , ஏழாம் வகுப்பு மட்டும் படித்து விட்டு, தாயை இழந்த ஆறு மாதத்துக்குள்ளேயே முற்றிலும் புதிய ஒரு சூழலில் தள்ளப்பட்டாலும், அதில் நிறைய சொந்தங்களையும் நண்பர்களையும் சம்பாதித்து , தக்க வைத்துக்கொண்டது நிச்சயம் அம்மாவின் திறமை மட்டும் அல்ல, மனிதர்களிடத்து மட்டும் அல்லாது, மிருகங்களிடத்தும், தாவரங்களிடத்தும் அவருக்கு இருந்த அன்பும் அக்கறையும் தான்.
    அன்புடன், ரமா

    ReplyDelete